யு சான்றிதழுடன் அக்.7-ல் வெளியாகிறது றெக்க

யு சான்றிதழுடன் அக்.7-ல் வெளியாகிறது றெக்க

Published on

ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'றெக்க' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், சதீஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'றெக்க'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரத்தின சிவா இயக்கி இருக்கிறார். கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை சிவபாலன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. அதனிடையே படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. இது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் முதல் கமர்ஷியல் படமாகும்.

இறுதிகட்ட பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து தணிக்கை விண்ணிப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, இப்படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in