டிசம்பர் வெளியீட்டில் இணைந்தது போகன்

டிசம்பர் வெளியீட்டில் இணைந்தது போகன்
Updated on: 
1 min read

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் 'போகன்' திரைப்படம் டிசம்பர் வெளியீடாக திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்திருக்கிறது.

'மிருதன்' படத்தைத் தொடர்ந்து 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. 'போகன்' என பெயரிடப்பட்ட இப்படத்தில் அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக இமான் பணியாற்றுகிறார்.

இப்படத்தில் விக்ரம் என்ற பாத்திரத்தில் ஜெயம் ரவியும், விக்ரமாதித்யன் என்ற பாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், இறுதிகட்ட பணிகளையும் துரிதப்படுத்தி இருக்கிறது படக்குழு.

'தனி ஒருவன்' அரவிந்த்சாமி கதாபாத்திரம் போலவே இப்படத்திலும் அவருடைய கதாபாத்திரம் கண்டிப்பாக பேசப்படும் என்று நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

"'போகன்' படத்தை பார்த்துவிட்டேன். மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது. கண்டிப்பாக ஜெயம்ரவிக்கு அடுத்த வெற்றியாக அப்படம் அமையும்" என்று 'தேவி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் பிரபுதேவா தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in