

சிபி சத்யராஜ் நடித்துள்ள ‘வட்டம்’ படம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் ‘வட்டம்’. இதில் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். திரில்லர் படமான இதை ‘மதுபானக் கூடம்’ கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருக்கிறது.
படம் பற்றி நடிகர் சிபிராஜ் கூறும்போது, ‘‘வட்டம் என் திரைப் பயணத்தில் முக்கியமான படம். சாதாரண மனிதனாக நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை ‘வட்டம்’ பூர்த்தி செய்துள்ளது. பெரிய லட்சியம் ஏதும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழும் மனிதனாக நடித்திருக்கிறேன். ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உட்பட மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது’’ என்றார்.