விஜய் நடிக்கும் ‘வாரிசு’: ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு

விஜய் நடிக்கும் ‘வாரிசு’: ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு
Updated on
1 min read

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.

வம்சி பைடிபள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

குடும்பக் கதை கொண்ட படம் என்பதால் பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்துள்ளது. தமன் இசை அமைக்கிறார். சென்னை, ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மாறி மாறி நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. அங்குள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் வரும் 25-ம் தேதி வரை படப்பிடிப்பு நடக்க உள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் நடக்க உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in