அறுந்த ரீலு 20: சிம்புவும் கைவிடப்பட்ட ப்ரேமம் ரீமேக்கும்!

அறுந்த ரீலு 20: சிம்புவும் கைவிடப்பட்ட ப்ரேமம் ரீமேக்கும்!
Updated on
1 min read

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்க 'ப்ரேமம்' ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு கைவிடப்பட்டு இருக்கிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் 'இது நம்ம ஆளு' மே 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் தற்போது தான் வெளியீட்டிற்கான இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

இப்படம் தயாரிப்பில் இருக்கும் போது தான் மலையாளத்தில் 'ப்ரேமம்' பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என ரீமேக் உரிமைக்கும் கடுமையான போட்டி நிலவியது.

தமிழில் நிவின் பாலி வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகர் யார் என்று ரீமேக் உரிமைக்கு போட்டியிட்டு வந்த தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து இருக்கிறது. அப்போது 3 கெட்டப்கள் இருப்பதால் தமிழில் சிம்புவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே சிம்புவை வைத்து 'இது நம்ம ஆளு' படத்தை பாண்டிராஜ் இயக்கி வருவதால் அவரிடம் இயக்குவதற்குப் பேசலாம் என்று அணுகியிருக்கிறார்கள். அவரும் 'கண்டிப்பா பண்ணலாம்' என்று தெரிவிக்க ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் இறங்கியது.

ஆனால், உரிமையை கைப்பற்றுவதில் சிக்கல் எழவே 'ப்ரேமம்' தமிழ் ரீமேக் முயற்சி கைவிடப்பட்டு இருக்கிறது. தற்போது வரை 'ப்ரேமம்' ரீமேக் உரிமையை யாரும் கைப்பற்றவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in