

'20 ஆண்டுகளுக்குப்பிறகு உங்களுடன் இணைந்து நடித்தது அருமையாக இருந்தது. நீங்கள் சிறந்தவர்' என நடிகை சிம்ரன் ட்விட்டரில் மாதவனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராக்கெட்ரி நம்பி விளைவு'. இந்தப் படத்தை இயக்கி நடித்திருக்கிறார் மாதவன். இதில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னதாக மாதவனுடன் நடிகை சிம்ரன் பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ராக்கெட்ரி படம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை சிம்ரன், ``பார்த்தாலே பரவசம்’ படத்தின் சிமி கேரக்டர், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ இந்திரா கேரக்டரை அடுத்து ’ராக்கெட்ரி’ படத்தின் மிஸஸ் நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்ததுவரை உங்களிடம் பெரிய மாற்றம் ஏதுமில்லை. 20 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் உங்களுடன் நடித்தது அருமையாக இருந்தது. நீங்கள் சிறந்தவர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.