

இசையமைப்பாளர் இளையராஜா, ரசிகர்களின் சில கேள்விகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், காணொலி மூலம் பதில் அளித்துள்ளார்.
‘‘கண்ணை மூடிக்கொண்டு, ‘கண்ணே கலைமானே' பாடலை கேட்டால், ‘காதல் கொண்டேன். கனவினை வளர்த்தேன்' வரிகள் வரும்போது என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது. இளையராஜாவை இசையின் கடவுள் என்று அழைக்க அதுதான் காரணம்’’ என்று ஒரு ரசிகர் கூறியிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள இளையராஜா, ‘‘இப்பாடலின் இயற்கையான அமைப்பு முறையே, உங்கள் இதயத்தை நேரடியாக தொடும்படி அமைந்திருக்கும். அதனால்தான் கேட்பவருக்கு கண்ணீர் வரும்’’ என்று கூறியுள்ளார்.
‘‘ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சியில் தனுஷ் பாடிய பாடலை, தனி டிராக்காக வெளியிட வேண்டும்’’ என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ‘‘ஒரு பாடல் உங்கள் மனதில் நிற்பதற்கு காரணம், அதை உருவாக்கியவரின் ஆழமும், திறமையும்தான். இதுதான் உயர்ந்த கலைப்படைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். அந்த பாடல் உங்கள் இதயத்தை தொட்டதற்காக தனுஷை பாராட்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.