

வம்சியுடன் விஜய் இணையும் 'விஜய் 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு 'வாரிசு' என பெயரிடப்பட்டுள்ளது.
தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நாளை (ஜூன் 22) விஜயின் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
கம்பீர லுக்கில் விஜய் கோட் சூட்டுடன் அமர்ந்திருக்கும்படியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
குறிப்பாக படத்தின் டைட்டில் 'வாரிசு'. இது குடும்பக் கதையைப் பின்னணியாக கொண்ட படமாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. காரணம், அண்மைக்கால விஜய் படங்களில் ஃபேமிலி ஆடியன்ஸ்களின் வரவு குறைந்துள்ளதாக திரைப் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். மீண்டும் தனது பழைய ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இது போன்ற கதையை விஜய் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.