க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் நடராஜனின் கூராய்வு 

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் நடராஜனின் கூராய்வு 
Updated on
1 min read

நடிகர் நட்ராஜன் எனப்படும் நட்டியுடன் 'சாயம்' இயக்குநர் இணையும் 'கூராய்வு' படத்தின் படப்பிடிப்பு தொங்கியது.

ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில் ஆண்டனி சாமி இயக்கத்தில் நட்டி நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'கூராய்வு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் பூஜை சென்னை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இப்படத்தை 'சாயம்' படத்தை இயக்கிய ஆண்டனி சாமி இயக்கவுள்ளார். பூஜையில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, எழில், மனோபாலா, மனோஜ் குமார், சரவண சுப்பையா, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படத்தை பற்றி பேசிய ஆண்டனி சாமி, ''2018-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. போஸ்ட்மார்ட்டம் எனப்படும் உடல் கூராய்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த கதை. இந்த திரைப்படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், மேலும் படத்தில் ஒரு ட்விஸ்ட் உள்ளது, இது நிச்சயமாக ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும்," என்று அவர் மேலும் கூறினார். இப்படத்தின் முக்கிய காட்சிகள் காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளன.

களஞ்சியம் இயக்கும் 'முந்திரிக்காடு' புகழ் சுபபிரியாமலர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மனோபாலா, இளவரசு, போஸ் வெங்கட், ரவிமரியா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in