

லண்டனில் பைக் ரைட் குழுக்களுடன் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
ஹெச்.வினோத்துடன் நடிகர் அஜித் குமார் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. 'ஏகே61' என அடைமொழியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்ட படமாக்கப்பட்டது.
வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்பட்டத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த இடைவெளியில் லண்டனுக்கு பறந்திருக்கிறார் நடிகர் அஜித். பைக் பிரியரான அவர், அங்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள BMW 1200RT பைக்குடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
அந்தப் புகைப்படங்களை #AKUKTrip என்ற ஹேஷ்டேகின் கீழ் பதிவிட்டு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அஜித் இந்தியா திரும்பியதும் அவர் நடிக்கும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.