யோகிபாபு நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’ படப்பிடிப்பு தொடக்கம்

யோகிபாபு நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’ படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாகும் 'மெடிக்கல் மிராக்கல்' படத்தில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

'ஏ1','பாரீஸ் ஜெயராஜ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன் இயக்கி தயாரிக்கும் படம் 'மெடிக்கல் மிராக்கல்' இந்தப் படத்தில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார்.

தர்ஷா குப்தா நாயகியாக நடிக்க, மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், வினோத், பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சித்தார்த் விபின் இசையமைக்க, மணிகரண்டராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் யோகிபாபு ஓலா டிரைவராக நடிக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் காமெடியாக உருவாகவுள்ள 'மெடிக்கல் மிராக்கல்' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in