7 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் துவங்கிய ஹலிதா ஷமீமின் 'மின்மினி' படப்பிடிப்பு

7 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் துவங்கிய ஹலிதா ஷமீமின் 'மின்மினி' படப்பிடிப்பு
Updated on
1 min read

ஹலிதா ஷமீம் இயக்கும் 'மின்மினி' படத்தின் படப்பிடிப்பு 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது துவங்கியுள்ளது.

'சில்லு கருப்பட்டி', 'ஏலே', மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான 'புத்தம் புது காலை விடியாதா' என்ற 'லோனர்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது 'மின்மினி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2015-ம் ஆண்டு குழந்தைப்பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார்.

இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும் வரை அதாவது 7 ஆண்டுகள் காத்திருந்து, அவர்களின் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். அவரின் இந்த முயற்சிக்கு திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தில் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

'மின்மினி' படத்தில் எஸ்தர் அனில் (பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தவர்), பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'இது தனது கனவுத்திரைப்படம்' என ஹலிதா ஷமீம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். ''மின்மினி'' படத்தினை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா 'அங்கர் பாய் ஸ்டூடியோஸ்' (Anchor Bay Studios) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in