

என் தாய், தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன் என நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். அண்மையில் விபத்து ஒன்றிலிருந்து மீண்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சொந்த வீடு வாங்கியிருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''என் தாய் தந்தையின் கனவை வீடு வாங்கி நிறைவேற்றுவேன் என நான் நினைத்ததேயில்லை. நீங்கள் மிகவும் ஆசைப்பட்டு விரும்பிய ஒரு கனவு நிச்சயமாக உங்களது கடின உழைப்பின் மூலமாகவும் உங்கள் பெற்றோரின் ஆதரவு மூலமாகவும் கண்டிப்பாக நிறைவேறும்.
எனக்கு 19 வயதாக இருக்கும்போது இந்த வீட்டைப் பார்த்து பதிவு செய்தோம். ஆனால் கரோனா பிரச்சினை மற்றும் என் வாழ்வில் இடையில் நடந்த மிக மோசமான விபத்து, நண்பர்களை இழந்தது போன்ற பல பிரச்சினைகள் காரணமாக இந்த வீட்டுக்குள் நுழைவதற்கு சரியான நேரம் அமையாமல் இருந்தது. ஆனால் இறுதியாக அது தற்போது நடந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. 19 வயதில் நான் ஒரு வீட்டை எனதாக்குவேன் என நினைக்கவே இல்லை'' என்று பதிவிட்டுள்ளார்.