

'கிரீடம்', 'ஜி', 'மங்காத்தா' ஆகிய படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கி வரும் படத்தில் அஜித்தோடு நடிக்க இருக்கிறார்.
அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் கெளதம் மேனன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்கள். மீண்டும் இசைக்கு ஹாரிஸ ஜெயராஜோடு இணைந்திருக்கிறார் கெளதம். இப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.
சென்னையில் நடைபெற்று வந்த இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. அஜித், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை விமான நிலையத்தில் படமாக்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது நாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இவ்வேடத்திற்கு த்ரிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஒரு நாயகியாக அனுஷ்கா நடித்து வந்தாலும், இப்படத்தின் கதை த்ரிஷாவின் பாத்திரத்தை சுற்றியே நடைபெற இருப்பதால் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.
மலேசியா படப்பிடிப்பினத் தொடர்ந்து நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் அஜித் - த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன்.