குமரி மாவட்ட களப்பின்னணி - பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் தக்ஸ்

குமரி மாவட்ட களப்பின்னணி - பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் தக்ஸ்
Updated on
1 min read

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்சன் திரைப்படம் 'தக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் 'ஹே சினாமிகா' என்ற படத்தை இயக்கியிருந்தார் பிருந்தா மாஸ்டர். இயக்குநராக முதல் படமான இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது தனது இரண்டாவது படத்தை இயக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'தக்ஸ்' என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை களப்பின்னணியாக கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையாக இது உருவாக்கவுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஹிந்தி நடிகர் ஹிர்ருது ஹாரூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் அமேசான் வெப் சீரிஸ் ஒன்றிலும், விஜய் சேதுபதி ஹிந்தியில் நடித்துள்ள 'மும்பைகார்' திரைபபடத்திலும் நடித்துள்ளார். இவருடன், நடிகர் ஆர். கே. சுரேஷ், தக்ஸுகளை எதிர்த்து போரிடும் முக்கியமான வேடத்திலும், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன் மற்றும் ரம்யா சங்கர் போன்றோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

பிரியேஷ் ஒளிப்பதிவும், சாம் சி. எஸ். இசையமைப்பும், எடிட்டிங் பணிகளை பிரவீன் ஆண்டனியும் மேற்கொள்கிறார். தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் உருவாக்கவுள்ளது. குமரி மாவட்டத்தின் பல இடங்களில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in