நல்லது செய்பவர்களை மக்களுக்கு தெரியும்: வடிவேலு

நல்லது செய்பவர்களை மக்களுக்கு தெரியும்: வடிவேலு
Updated on
1 min read

யார் நல்லது செய்வார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்று நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் வடிவேலு வாக்களித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வடிவேலு "பரீட்சையில் யார் பாஸ் ஆகிறார்கள் என்பது போல இது ஒரு அருமையான தேர்தல். இந்த நாட்டு யாருக்கு நல்லது செய்வார்கள் என்பதைப் பார்த்து ஒட்டுப் போட்டு வெற்றி பெற செய்யணும். 100% வாக்கு வருவது தான் நாம் ஜனநாயகத்திற்கு கொடுக்கக்கூடிய மரியாதை.

கள்ள ஓட்டைத் தவிர கண்டிப்பாக அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். புதிதாக வருபவர்கள் யார் மக்களுக்கு நல்லது செய்தாலும் தலை வணங்க வேண்டியது தான். யார் நல்லது செய்வார்கள் என்பது மக்களுக்கு தெரியும்" என்று தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் திமுகவிற்கு பிரச்சாரம் செய்தது, தேமுதிக குறித்து கேள்விகள் எழுப்பிய போது "அந்த கடையை மூடுங்க" என்று மட்டும் பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in