

கண்டிப்பாக இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல் தான் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. கண்டிப்பாக இம்முறை வித்தியாசமான தேர்தல் தான்" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "அது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.