

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் மறைவதற்கு முன் இறுதியாக பாடிய 'விஸ்வரூப தரிசனம்' என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் நடந்த விழாவில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்துகொண்டு 'விஸ்வரூப தரிசனம்' ஆல்பத்தை வெளியிட்டார். இந்த பாடல்களுக்கு கே.எஸ்.ரகுநாதன் இசை அமைத்துள்ளார். இதனை இயக்கி, தயாரித்துள்ள ஸ்ரீஹரி . இந்த ஆல்பம் பற்றி அவர் கூறும்போது, " இது 30 நிமிட இசை ஆல்பம். இதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் பாட வேண்டும் என்று முடிவு செய்தோம். பாடலுக்கான பிண்ணனி இசை தயாராக இல்லாதிருந்தபோதும் அவர் குரலில் இந்தப் பாடலை உடனே ஒலிப்பதிவு செய்து முடிக்க விரும்பினேன்.
பின்னணி இசை இல்லாமல் 'டெம்போ கிளிக் டிராக்' என்னும் நுணுக்கத்தைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்தோம். அன்று, பின்னணி இசை இல்லாத காரணம் காட்டி அவர் குரலில் பாடலைப் பதிவு செய்யாமல் இருந்திருந்தால், இன்று இந்தப் பாடலை இழந்திருப்போம்'' என்று தெரிவித்தார்.