

சென்னை: ஈஷாவின் 'மண் காப்போம்' இயக்கத்தினர் வரைந்துள்ள விழிப்புணர்வு சுவர் ஓவியங்களை நடிகர் நந்தா, பாடகி மாளவிகா பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.
ஈஷா சார்பில் சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றான மவுன்ட் ரோட்டில் 'மண் காப்போம்' இயக்கத்தினர் விழிப்புணர்வு சுவர் ஓவியங்களை வரைந்துள்ளன. இதனை நடிகர் நந்தா, பாடகி மாளவிகா ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து நடிகர் நந்தா "இந்த இயக்கம் மிகப் பெரிய எழுச்சி அடைந்ததற்கு சத்குரு என்ற தனிமனிதர் தான் மிகப்பெரிய காரணம். இவர் இதற்கு முன்பு 'காவேரி கூக்குரல்' என்ற இந்திய நதிகளுக்கான இயக்கத்தை முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்தினார். தற்போது 'மண் காப்போம்' இயக்கத்தினை உலக அரங்கில் எடுத்துச்சென்ற பெருமையும் இவரையே சேரும்.
நம் எதிர்கால தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான நன்மை இதுதான். இவர் இந்த வயதில் இவ்வளவு பெரிய பயணம், அதுமட்டுமல்லாமல் உலக தலைவர்களுக்கும் இதனை எடுத்து சென்றுள்ளார்'' என தெரிவித்தார்.
பின்னணிப் பாடகி மாளவிகா ஜெயராம் சுகையில், 'மண் வளம் காக்க உலக நாடுகளில் பயணம் செய்துவிட்டு இன்று இந்தியாவிற்கு வரும் சத்குருவை வரவேற்கிறேன். இந்த இயக்கமும் அதன் நோக்கமும் நாம் அனைவரும் அனைவருக்கும் பகிரப்படவேண்டிய முக்கியமான ஒன்றாகும்' எனக் கூறினார்.
மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து ‘மண் காப்போம்’ பயணத்தை தொடங்கிய ஈஷாவின் சத்குரு, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவை அடைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.