Published : 27 May 2022 12:29 PM
Last Updated : 27 May 2022 12:29 PM

ஜூன் 24-ல் திரைக்கு வருகிறது அசோக் செல்வனின் வேழம்

அசோக் செல்வன் நடிக்கும் “வேழம்” திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில், வேழம் படத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 10 வருடங்களாக உதவி இயக்குநராகவும், விளம்பரப் பட இயக்குநராகவும், குறும்பட இயக்குநராகவும் அனுபவமுள்ள சந்தீப் ஷ்யாம், இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.

“வேழம்” திரைப்படம் ஜூன் 24, 2022 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. SP Cinemas, இந்தியா உட்பட இந்தப் படத்தின் உலகளாவிய திரையரங்கு உரிமையைப் பெற்று வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தில் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), சங்கிலி முருகன் மற்றும் மராத்தி நடிகர் மோகன் ஆகாஷே ஆகியோருடன் இன்னும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

ஜானு சந்தர் (இசை), சக்தி அரவிந்த் (ஒளிப்பதிவு), A.K. பிரசாத் (எடிட்டர்), சுகுமார். R (கலை இயக்குனர்), தினேஷ் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), M.சரவண குமார் (ஒலி கலவை) ஆகியோர் படத்தின் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x