

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் 'காஷ்மோரா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
கோகுல் இயக்கத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் ஆகியோருடன் 'காஷ்மோரா' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சுமார் 60 கோடி பொருட்செலவு, 15 அரங்குகள் என பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது 'காஷ்மோரா'. இதுவரை 13 அரங்குகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இப்படத்தில் 3 கெட்டப்களில் நடித்து வருகிறார் கார்த்தி.
நயன்தாரா, ஸ்ரீதிவ்யா இருவருமே நடித்து வந்தாலும், ஒரே காட்சியில் இருவரும் வருவது போன்று இதுவரை எந்த காட்சியும் படமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 'காஷ்மோரா' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இதில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மூவருமே பங்கேற்றிருக்கிறார்கள்.
'காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் கார்த்தி.