

தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'திருச்சிற்றம்பலம்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை என்பதால், ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டது.
அதைப்போலவே 50 நாட்களில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒட்டுமொத்தமாக முடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளை முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. வரும் ஜூலை 28-ஆம் தேதி 39வது பிறந்த நாளை தனுஷ் கொண்டாடஉள்ளார். இந்த நாளிலேயே படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படமும் நெட்ஃப்ளிக்ஸில் வரும் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகிறது என்பதால், அடுத்தடுத்த வாரங்களில் தனுஷின் இரண்டு படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
;'திருச்சிற்றம்பலம்' படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார்.