தீபாவளிக்கு வெளியாகிறது கார்த்தியின் ‘சர்தார்’
கார்த்தி நடிக்கும் 'சர்தார்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சுல்தான்' திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படம் 'சர்தார்'. 'இரும்புத் திரை' 'ஹீரோ' உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தி நரைத்த தாடியுடன் வயதான தோற்றத்திலும், காவல் அதிகாரியாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்நிலையில், கார்த்தியின் பிறந்த நாளையொட்டி 'சர்தார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனிடையே, முத்தையாக இயக்கத்தில் கார்த்தி நடித்த 'விருமன்' படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
