மீண்டும் 'ஜெய்பீம்' இயக்குநர் ஞானவேலுடன் கைகோக்கும் சூர்யா? 

மீண்டும் 'ஜெய்பீம்' இயக்குநர் ஞானவேலுடன் கைகோக்கும் சூர்யா? 
Updated on
1 min read

'ஜெய்பீம்' பட இயக்குநர் ஞானவேலுடன் மீண்டும் சூர்யா இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான 'ஜெய் பீம்' படம் மொழிகளைக்கடந்து பல்வேறு தரப்பினரால் வரவேற்கப்பட்டது. அண்மையில் இந்த படத்தின் 200-வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இயக்குநர் ஞானவேலுடன், நடிகர் சூர்யா மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவை பொறுத்தவரை அவர் தற்போது, பாலா இயக்கத்தில் 'சூர்யா41' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தில் பிஸியாக இருப்பதால், 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பை தொடங்க கால தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது.

இதனால், பாலா படத்திற்கு அடுத்ததாக, 'ஜெய்பீம்' இயக்குநருடன் சூர்யா இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in