சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ.. திரையில் விரைவில் தர்சன்!

சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ.. திரையில் விரைவில் தர்சன்!
Updated on
1 min read

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்சன் கணேசன் விரைவில் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர் சிவாஜி கணேசன். அவரது மகன் பிரபு நடிகரானார். அவரைத்தொடர்ந்து விக்ரம் பிரபு அண்மையில் வெளியான 'டாணாக்காரன்' வரை பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ உருவாகிறார். சிவாஜியின் மகன் ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்சன் கணேசன் பூனேவில் நடிப்பு பயிற்சி எடுத்துவருகிறார். ,

தர்சன் கணேசன், தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக்கூத்து நாடகங்கள் அரங்கேற்றிவிட்டு தகுந்த பயிற்சியுடன் உள்ளார். அவருக்கு பல கம்பெனிகள் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார்கள். விரைவில் முறைப்படி அவர்கள் அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே ராம்குமாரின் மூத்த மகன் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in