

அருள்நிதி நடிக்கும் 'டி பிளாக்' திரைப்படம் வரும் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல யூடியூப் சேனலான 'எரும சாணி' புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள் நிதி நடிக்கும் திரைப்படம் 'டி பிளாக்'. ரத்தன் யோகான் இசையமைக்க, தயாரிப்பையும் ஒளிப்பதிவையும் அரவிந்த் சிங் செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஒரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தப் படத்தில் அருள்நிதி கல்லூரி மாணவராக நடித்துள்ளார். படத்தில் விஜயகுமார், உமா ரியாஸ், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படம் வரும் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதே நாளில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘திருச்சிற்றம்பலம்’ படமும் வெளியாகிறது.
அதேபோல அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கி இருக்கும் 'தேஜாவு' படத்தில் நடித்து முடித்துள்ளார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது.