'விஜய் 66' படத்தில் இணைந்த பிரபு தேவா?`

'விஜய் 66' படத்தில் இணைந்த பிரபு தேவா?`
Updated on
1 min read

விஜய் 66 படத்தில் நடன இயக்குநராக பிரபுதேவா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் 'விஜய்66' என அடைமொழியிட்டு அழைக்கப்படுகிறது. தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கதையாக உருவாக்கவுள்ள இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு உருவாகும் இந்த படப்பிடிப்பில் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 'விஜய் 66' படத்தில் நடன இயக்குநராக பிரபு தேவா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3வது பாடலுக்கு பிரபு தேவா கோரியோகிராபராக பணியாற்றுவார் என கூறப்படுகிறது. முன்னதாக, இருவரும் வில்லு, போக்கிரி படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in