Published : 15 May 2022 05:41 AM
Last Updated : 15 May 2022 05:41 AM

நான் பெரிய நடிகன் என்பதை நம்ப முடியவில்லை - கமல்ஹாசன்

சென்னை: மறைந்த நடிகரும் முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் 35-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில், அவரது சிலையை கமல்ஹாசன் நேற்று திறந்து வைத்தார்.

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் கல்வி குழுமத் தலைவருமான ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நலிந்த நாடகக் நடிகர்களுக்கு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின், இலவச குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதில் நடிகர்கள் பிரபு, ராஜேஷ், எஸ்.வி.சேகர், கவுண்டமணி, செந்தில், பிரசாந்த், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:

ஐசரி வேலன் பொறுப்பும், பதவியும் வந்தபிறகும், நடிப்பின் மீதான காதலால் எங்களுடன் நடித்தார். இந்த இடம் படப்பிடிப்பு அரங்கமாக இருந்தபோது பல காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. எம்ஜிஆருக்கு ‘சங்கே முழங்கு’, பிறகு ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்துக்கான பாடல்கள் இந்த அரங்கில் எடுக்கப்பட்ட ஞாபகம் வருகிறது. நான் அப்போது உதவி நடன இயக்குநர். என் நினைப்பில் நான் இன்னும் அப்படித்தான் இருக்கிறேன். நடுவில் பெரிய போஸ்டர் போட்டு பெரிய நடிகன் என்கிறார்கள், என்னாலேயே நம்ப முடியவில்லை.

ஐசரி கணேஷ் தொடர்ந்து பல நல்ல காரியங்களை செய்ய வேண்டும். இவ்வாறு கமல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x