Published : 14 May 2022 07:14 PM
Last Updated : 14 May 2022 07:14 PM

கேன்ஸ் படவிழாவில் வெளியாகும் பா.இரஞ்சித்தின் 'வேட்டுவம்' முதல் பார்வை

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் வேட்டுவம் படம் மற்றும் இணையத்தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது.

'அட்டக்கத்தி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பா.ரஞ்சித். இந்த படத்தைத்தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கினார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை' இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததா 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தியில் பிர்சா முண்டா வாழ்க்கையை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், தன்னுடைய 'நீலம் புரொடக்ஷன்ஸ்'நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அதன்படி, 'பரியேறும்பெருமாள்' 'இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்', 'சேத்துமான்' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து நீலம் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்துடன் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் (Golden Ratio Films) இணைந்து தயாரிக்கும் 'வேட்டுவம்' படம் மற்றும் இணையதொடரை இயக்குனர் பா.இரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. இதில் பா.இரஞ்சித் கலந்துகொள்கிறார். படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x