'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து' பாடல் வீடியோ வெளியீடு

'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து' பாடல் வீடியோ வெளியீடு
Updated on
1 min read

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து' பாடல் வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அவரது இசையில், 'அரபிக் குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல்கள் ஹிட் அடித்தன. குறிப்பாக ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூபில் இதுவரை 40 கோடி பார்வைகளைக் கடந்தும் 6 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்துள்ளது.

'பீஸ்ட்' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. அதன்படி, படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வரும் மே 11 ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி சமீபத்தில் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வீடியோ வெளியான நிலையில், இன்று ‘அரபிக் குத்து’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in