

'விஜய் 66' படத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். 'விஜய் 66' என அழைக்கப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவருடன், நடிகர் சரத்குமார் மற்றும் ஷ்யாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சரத்குமார் விஜய்யின் அப்பாவாகவும், ஷ்யாம் விஜய்யின் சகோதரராகவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைக்கவுள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.
இந்நிலையில், படத்தில் சரத்குமார் நடிக்க உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள படக்குழு, அத்துடன், பிரகாஷ்ராஜ், பிரபு ஆகியோரும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.