ரெமோ டப்பிங்: கமல் பாணியில் சிவகார்த்திகேயன் முயற்சி

ரெமோ டப்பிங்: கமல் பாணியில் சிவகார்த்திகேயன் முயற்சி
Updated on
1 min read

'ரெமோ' படத்தின் டப்பிங் பணிகளுக்காக கமல் பாணியில் சிவகார்த்திகேயன் முயற்சி செய்ய இருக்கிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், சதீஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் ஜூன் 2ம் வாரத்தில் தொட்ங்கப்பட இருக்கிறது.

இப்படத்தின் கதைப்படி சிவகார்த்திகேயன் பிரதான காட்சிகளில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். இக்காட்சிகளுக்கு அந்த பாத்திரத்துக்கு ஏற்றவாறு ஒரு பெண்ணை டப்பிங் பேச வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது படக்குழு. ஆனால், சிவகார்த்திகேயன் தானே பேசிவிடுவதாக தெரிவித்திருக்கிறார்.

ஜூன் 2ம் வாரத்தில் தொடங்கவிருக்கும் டப்பிங் பணிகளில் முதலில் பெண் வேடத்துக்கு டப்பிங் பேச இருக்கிறார். பல்வேறு குரல்களில் டப்பிங் பேசி, அதில் எது சரியாக இருக்கிறதோ அதையே படத்துக்கு உபயோகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இதே பாணியில் தான் கமலின் 'அவ்வை சண்முகி' படத்துக்கும் டப்பிங் பேசினார் கமல். முதலில் பெண்ணை வைத்து பேச திட்டமிட்டார்கள். ஆனால், கமல் மறுத்து தானே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in