

மதுரை: மதுரையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: கலை, இலக்கியம் அரசியலுக்கான முக்கிய வடிவம். இவற்றை வளர்க்கும் விதமாக ‘வானம் கலை திருவிழா’ எனும் நிகழ்வு நடத்தப்படுகிறது. தமிழக இலக்கிய சூழலுக்கும், பொதுமக்களுக்கும் இடையே இடைவெளி உள்ளது. தமிழ் இலக்கியத்தை கொண்டாடுவது குறைவு என்றாலும், தற்போது தமிழ் எழுத்துக்களை வாசிக்கும் இளைஞர்கள் கூட்டம் அதிகரிக்கிறது.
அரபு இலக்கியம் கொண்டாடப்படும் அளவுக்கு தலித் இலங்கியங்கள் கொண்டாட வேண்டும். இந்தி ஆதிக்கம் அதிகரித்து, நம்மைவிட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வட இந்தியர்களுக்கு உள்ளது. இந்தியை ஒருபோதும் ஏற்கக்கூடாது. இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். திராவிடர்கள் இணைந்து நின்றால் நமக்கான முக்கியத்துவம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.