

நடிகர் 'ஜெயம்' ரவி அடுத்ததாக இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் இதர நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில், பிரபுதேவா தயாரிப்பில், 'போகன்' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
"நான் இயக்குநர் விஜய்யுடன் பணியாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன் ஆனால் முடியவில்லை. அவரது இயக்கம் எனது பாணி நடிப்புக்கு பொருத்தமாக இருக்கும்.
இது ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. இந்தப் படம் எங்கள் பெயரை தேசிய அளவில் பிரபலப்படுத்தும். நாங்கள் இப்போது பணியாற்றும் படங்கள் முடிந்தவுடன் இந்தப் படத்தை தொடங்குவோம்" என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.