

நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் அளித்த புகாரின் பேரில் மதுரை, சேலம் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் திருட்டு டிவிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சோதனையில் ‘பென்சில்’, ‘கோ 2,’ ‘தெறி’, ‘சவாரி’ உள்ளிட்ட பல படங்களின் டிவிடிக்கள் சிக்கியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் அளித்த புகாரின் பேரில் மதுரையில் உள்ள பாலரங்கபுரம் பகுதியில் 1 லட்சம் டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் மதிப்புள்ள கணினி இயந்திரங்கள் மற்றும் குறுந்தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனை அடுத்து நேற்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு குடோனில் 20 பேர் திருட்டு டிவிடிக்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அங்கே இருந்து கரூர், தர்மபூரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு விநியோகிக்கப்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.