'தமிழ் படங்களை விட நல்ல படங்கள் ஹிட்டாகிறது' - உதயநிதி ஸ்டாலின்

'தமிழ் படங்களை விட நல்ல படங்கள் ஹிட்டாகிறது' - உதயநிதி ஸ்டாலின்
Updated on
1 min read

'தமிழ் மக்கள் நல்ல படங்கள் எந்த மொழி என்றாலும் பார்க்கிறார்கள்' என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் படம் `தி வாரியர்'. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லிங்குசாமி முதல் முறையாக இயக்கும் தெலுங்கு படமாகவும், அதேநேரம் தமிழிலும் பைலிங்குவல் படமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்க, கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம்வரும் ராம் பொத்தினேனி, தமிழ் திரையுலகில் ராம் அறிமுகமாகும் முதல் படம் என்பதால் இதன் புல்லட் பாடல் லிரிக் வீடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய உதயநிதி, "நான் தெலுங்கு படங்கள் பெரிதாக பார்த்ததில்லை. அதனால் ராம் படங்களையும் பார்த்ததில்லை. ஆனால், புஷ்பா படம் பண்ணிய வேலையால் இப்போது தெலுங்கு படங்களை பார்த்து வருகிறேன். தமிழ் மக்கள், தமிழ்ப் படங்களை ஓட வைக்கிறார்களோ இல்லையோ, நல்ல படங்கள் எந்த மொழி என்றாலும் பார்க்கிறார்கள். தமிழ் படங்களை இதற்காக குறை சொல்லவில்லை. நல்ல திரைப்படங்களை தமிழ் மக்கள் பார்ப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in