'விஜய் 66' படத்தில் இணைந்த ஷாம்? - புது அப்டேட்

'விஜய் 66' படத்தில் இணைந்த ஷாம்? - புது அப்டேட்
Updated on
1 min read

'விஜய் 66' படத்தில் நடிகர் ஷாம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும், 'விஜய் 66' படத்தை இயக்குகிறார் இயக்குநர் வம்சி. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். 'விஜய் 66' படப்பிடிப்பு இம்மாதம் 8 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் ஷாம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குடும்பக் கதையாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in