''பழிவாங்குறதுனா என்னான்னு தெரியுமா?'' - கீர்த்தி சுரேஷ் வசனத்தில் தெறிக்கும் 'சாணிக்காயிதம்' டீசர்

''பழிவாங்குறதுனா என்னான்னு தெரியுமா?'' - கீர்த்தி சுரேஷ் வசனத்தில் தெறிக்கும் 'சாணிக்காயிதம்' டீசர்
Updated on
1 min read

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சாணிக்காயிதம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் வருகின்றன 6-ம் தேதி ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.

'ராக்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்த அருண் மாதேஸ்வரனின் அடுத்த படைப்பு 'சாணிக்காயிதம்'. கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்கீரன் சீன் மீடியா என்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். படத்துக்கு யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய நாகூரான் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. படம் மே 6-ம் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல, ஒட்டுமொத்த சாணிக்காயிதம் படத்தின் தன்மை குறித்து அதன் டீசரின் வாயிலாகவே அறிய முடிகிறது.

''பழிவாங்குறதுன்னா என்னன்னு தெரியுமா?'' என்ற கீர்த்தி சுரேஷின் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து வரும் வசனம் பார்ப்பவர்களை ஈர்க்கிறது. யாரோ ஒருவரால் வாழ்க்கையை முற்றிலுமாக இழந்து நிற்கதியாக நிற்கும் கீர்த்தி சுரேஷ், அவரைப்பழிவாங்க துடிக்கிறார். ரத்தமும், சதையுமான காட்சிகளுடன் படம் இருக்கும் என்பதை கீர்த்தி சுரேஷ் துப்பாக்கியுடன் நடந்து வரும் காட்சிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. சூரியனை மறைத்து கீர்த்தி நிற்கும் அந்த 'லோ ஆங்கிள்' ஷாட் ஒளிப்பதிவின் தரத்தை உணர்த்துகிறது. மே 6-ம் தேதி வெளியாகும் இந்த படம் குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in