நஸ்ரியா - நானி நடிப்பில்  'அடடே சுந்தரா' படத்தின் டீசர் வெளியீடு

நஸ்ரியா - நானி நடிப்பில்  'அடடே சுந்தரா' படத்தின் டீசர் வெளியீடு
Updated on
1 min read

நஸ்ரியா - நானி நடிப்பில் உருவாகியுள்ள 'அடடே சுந்தரா' படத்தின் டீசர் இன்று வெளியானது.

கடந்த 2014-ம் ஆண்டு தமிழில் வெளியான 'திருமணம் எனும் நிக்காஹ்' படத்தில் நடித்து முடித்த கையோடு, ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா நடிப்புக்கு தற்காலிக முழுக்கு போட்டியிருந்தார். அவ்வப்போது மலையாள படங்களில் முகம் காட்டி வந்தவர், தற்போது விவேக் ஆத்ரேயா இயக்கும் 'அடடே சுந்தரா' படத்தில் நடித்திருக்கிறார். நானி நாயகனாக நடிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. கிட்டதட்ட 8 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியாவைக் காண அவரது ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியானது.

2.10 நிமிடங்களை கொண்டுள்ள ’அடடே சுந்தரா’ டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

’அடடே சுந்தரா’ ஜூன் 11 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in