Published : 19 Apr 2022 02:37 PM
Last Updated : 19 Apr 2022 02:37 PM

ரயிலில் ஒட்டப்பட்ட 'விக்ரம்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - வைரல் வீடியோ

'விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரயில் ஒன்றில் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் 'விக்ரம்'. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படம் ஜூன் 3-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. மூன்று பெரிய ஹீரோக்கள் இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, படத்தை தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதன் ஒருபகுதியாக 'விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஈரோட்டில் ரயில் ஒன்றில் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோவை சதர்ன் ரயில்வே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பின்னணியில் 'விக்ரம்' படத்தின் தீம் மியூசிக் ஒலிக்க, ரயிலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x