'பஞ்சாயத்து முடிஞ்சிடிச்சு...' - யுவனின் 'கருப்பு திராவிடன்' பதிவுக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

யுவன் - இளையராஜா
யுவன் - இளையராஜா
Updated on
1 min read

'கருப்பு திராவிடன்... பெருமைமிகு தமிழன்' என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். கருப்பு நிற வேட்டி மற்றும் கருப்பு நிற டி ஷர்ட் அணிந்தபடி யுவன் பகிர்ந்த அப்புகைப்படம் வைரலனாது.

அண்மையில், ‘மோடியும் அம்பேத்கரும்' என்கிற புத்தகத்தில் முன்னுரை எழுதியிருந்த இளையராஜா, 'பிரதமர் மோடியின் ஆட்சியைப் பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார்' என்று குறிப்பிட்டிருந்தார். மோடியை அம்பேத்கருடன் ஓப்பீடு செய்த இந்தக் கருத்துக்கு சில தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக நெட்டிசன்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தக் கருத்தை திரும்பப் பெற முடியாது என்று இளையராஜாவும் உறுதிபட தகவல் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், தனது தந்தை இளையராஜாவின் கருத்துக்கு எதிர்வினையாகவே யுவன், 'கருப்பு திராவிடன்... பெருமைமிகு தமிழன்' என்ற இப்பதிவை பதிவிட்டதாக நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அவற்றுள் சில:

Prakash: "நாம சொல்ல கஷ்டப்பட்டதை யுவன் ஈஸியா சொல்லிட்டார்."

fouzi: "இளையராஜா அவர்களின் கருத்துக்கு யுவன் compensate செய்துவிட்டார். பஞ்சாயத்து முடிஞ்சிடிச்சு..."

Gokul-AMMK: "தன் அப்பனுக்கு பாடம் சொல்லும் சுப்பையன் ~ யுவன்"

KARTHIK: "அன்பே யுவன்...”

தஞ்சாவூரான்: "பெருமைபடுத்தி விட்டீர்கள் யுவன்."

Na.selvanathan: "(யுவன்) என்னும் சுயமரியாதைத் தமிழன்."

கொக்கி_பாலிடிக்ஸ் 2.O: "இளையராஜாவ டெல்லிக்கு அனுப்பு... யுவன் வீட்டுக்கு ரைடு அனுப்பு..."

M.R.Radha: "தன் வினை, தன்னை சுடும்... இளையராஜாவை, யுவன் சங்கர் ராஜா பார்த்துக் கொள்வார்."

Pa Prem: "Black Dravidian. இசைத்தலைவன் எங்களை கைவிடவில்லை... Love you Thalaiva."

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in