'கருப்பு திராவிடன்... பெருமைமிகு தமிழன்' - வைரலாகும் யுவன் சங்கர் ராஜாவின் பதிவு

'கருப்பு திராவிடன்... பெருமைமிகு தமிழன்' - வைரலாகும் யுவன் சங்கர் ராஜாவின் பதிவு

Published on

சென்னை: 'கருப்பு திராவிடன்... பெருமைமிகு தமிழன்' என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கருப்பு நிற வேட்டி மற்றும் கருப்பு நிற டி ஷர்ட் அணிந்தபடி அவர் இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில், ‘மோடியும் அம்பேத்கரும்' என்கிற புத்தகத்தில் முன்னுரை எழுதி இருந்த இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடியின் ஆட்சியைப் பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார் என தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தக் கருத்தை திரும்பப் பெற முடியாது என்று இளையராஜாவும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற வேட்டி மற்றும் கருப்பு நிற டி ஷர்ட் அணிந்தபடி கடற்கரை ஓரத்தில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து ‘கருப்பு திராவிடன்... பெருமைமிகு தமிழன்’ எனப் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in