

புதுச்சேரி:புதுச்சேரி அரசின் அனுமதியில்லா மல் நடிகர் விஜய் படத்துக்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்புகள் வைக்கப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியு றுத்தியுள்ளது.
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
புதுச்சேரியில் திறந்தவெளி விளம்பரங்கள் தடை செய்யப் பட்டது. அந்த சட்டத்தை அமல் படுத்த வேண்டியது உள்துறை மற்றும் நகராட்சியின் கடமை. விளம்பரங்கள் வைக்கும்போதே அதை தடுத்து நிறுத்த வேண்டும். நகரப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி விளம்பர பலகை வைக்கப் பட்டுள்ளது. அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. ஏன் விளம்பர பதாகை வைப்பதை தடுத்து நிறுத்தவில்லை? மாவட்ட ஆட்சியர் தமாஷ் அறிக்கை வெளியிடுகிறார்.
பேனர் வைப்பதில் நடிகரின் ரசிகர்களுக்குள் சண்டை வருகிறது. சட்டமன்றத்தில் தடை சட்டம் போட்டபிறகு பெரிய நிறுவனங்கள் பேனர் வைக்க அனுமதி கொடுப்பது ஏன்? பிளாட்பாரத்தில் அதிகளவில் திறந்தவெளி விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அப்போது அதிகாரிகள் கையூட்டு வாங்குகிறார்களா? திறந்தவெளி விளம்பரத்தை முறைப்படுத்த வேண்டிய, தடுக்க வேண்டிய துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் பல லட்சம் ரூபாய் கைமாறியுள்ளது.
புதுச்சேரியில் நடிகர் விஜய் படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் 5 தினங்களுக்கு அனைத்து ஷோக்களுக்கும் டிக்கெட் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் அனுமதி இல்லாமல் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வைக்கப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தியேட்டர்களில் படம் திரையிட அனுமதி அளிக்கக் கூடாது. என்று தெரிவித்துள்ளார்.