சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மகன் அறிமுகமாகும் 'ஓ மை டாக்'  டீசர் வெளியீடு 

சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மகன் அறிமுகமாகும் 'ஓ மை டாக்'  டீசர் வெளியீடு 
Updated on
1 min read

நடிகர் அருண்விஜய் மகன் அறிமுகமாகும் 'ஓ மை டாக்' படத்தின் டீசரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படம் 21-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நடிப்பைக் கடந்து படங்களை தயாரிக்கும் பணிகளிலும் நடிகர் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி சூர்யா, ஜோதிகா இணைந்து நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனமான '2டி என்டர்டெயின்மென்ட்' இதுவரை 'பசங்க 2', 'சூரரைப் போற்று', 'மகளிர் மட்டும்', '36 வயதினிலே', 'பொன்மகள் வந்தாள்', 'ஜெய்பீம்' உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளது.

அந்த வகையில், 2டி நிறுவனத்தின் சார்பில் சூர்யா ஜோதிகா இருவரும் தற்போது 'ஓ மை டாக்' என்ற படத்தை தயாரித்துள்ளனர். இதில் அருண் விஜய்யின் மகன் 'அர்னவ் விஜய்' முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் அர்னவ். இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படம் வரும் 21-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகயுள்ளது.

குழந்தைகளுக்கும் நாய்களுக்குமான பந்தத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

டீசர் முழுவதும் நாயும் அர்னவ் விஜயுமே நிறைந்திருக்கின்றனர். படம் நெடுங்கிலும் இருவரின் உறவும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதை டீசரின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு சிறுவனுக்கும் நாயுக்கும் இடையேயான இணைபிரியா பயணமாக இப்படம் அமையும் என கணிக்க முடிகிறது. தவிர, கேமிரா ஷாட்ஸ், கதை நடைபெறும் இடம் நிறைவான காட்சி அனுபவத்தை தருகிறது. ஒளிப்பதிவும், கதைக்களமும் இணைந்து 'ப்ளஸண்ட் மூட்' உருவாக்கும் கதையாக 'ஓ மை டாக்' இருக்கும் என தெரிகிறது.

'ஓ மை டாக்' படத்தின் டீசர்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in