

ரஜினி நடித்துவரும் '2.0' படத்தில் ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை கிராபிக்ஸ் செய்து வருவதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் உள்ள மைதானத்தில் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க 3டி கேமரா தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
3டி தொழில்நுட்ப கேமரா என்பதால் 2 கேமராவில் படமாக்கி வருகிறார்கள். இதனால் கிராபிக்ஸ் உள்ள காட்சிகள் அனைத்துமே இரண்டு முறை கிராபிக்ஸ் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சிகள் அனைத்தையுமே உடனடியாக கிராபிக்ஸ் செய்வதற்கு கொடுத்து விடுகிறது படக்குழு.
ஷங்கர் முன்பே திட்டமிட்டு எப்படி காட்சிப்படுத்தப் போகிறோம், எப்படி கிராபிக்ஸ் இருக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டதால் படப்பிடிப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.