ஆயுர்வேத சிகிச்சை, ஆன்மிக தரிசனம் - நடிகர் அஜித்தின் கேரள விசிட்

ஆயுர்வேத சிகிச்சை, ஆன்மிக தரிசனம் - நடிகர் அஜித்தின் கேரள விசிட்
Updated on
1 min read

நடிகர் அஜித் கேரளாவுக்கு விசிட் அடித்துள்ள புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித், ஹெச்.வினோத் உடனான அடுத்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். நீண்ட நாள்களாக இந்தப் படம் தொடங்குவதற்கான தயாரிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் சில நாட்கள் முன்பு ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியதாக சொல்லப்பட்டது. இதனிடையே, அஜித் கேரளாவில் இருக்கும் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சில நாட்கள் முன்பே கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அஜித் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. குருகிருபா எனப்படும் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அவரின் சிகிச்சை முடிந்துள்ள நிலையில், தன்னை சிறப்பாக உபசரித்த ஆயுர்வேத சிகிச்சை மைய நிர்வாகத்தை வாழ்த்தி அஜித் எழுதிய கடிதம் இப்போது வெளியாகியுள்ளது.

இதே சிகிச்சை மையத்தில் தான் மலையாள நடிகர் மோகன்லால் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில்தான், தனக்கு சிகிச்சை அளித்த இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டு, "உங்களுக்கும், சிகிச்சை மைய குழுவினருக்கும், நீங்கள் அளித்த உபசரிப்பு, அன்பு, கனிவு ஆகியவற்றுக்கு எனது நன்றிகள். உங்கள் அனைவருக்கும் சிறப்பான வாழக்கை அமைய எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கோவிலுக்கு விசிட் அடித்த அஜித், பாரம்பரிய வேஷ்டி உடையில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in