உடலமைப்பு மாற்றம்: பின்னணி பகிர்கிறார் ஆர்யா

உடலமைப்பு மாற்றம்: பின்னணி பகிர்கிறார் ஆர்யா
Updated on
1 min read

88 கிலோ அளவுக்கு உடலமைப்பை தான் மாற்றியதன் காரணம் குறித்து நடிகர் ஆர்யா தெரிவித்தார்.

'பெங்களூர் நாட்கள்' படத்துக்குப் பிறகு, ராகவ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்காக முன்பு எப்போதும் இல்லாத வகையில் தனது உடலமைப்பை மாற்றியிருக்கிறார் ஆர்யா. சமீபத்தில் மேலும் தனது உடலமைப்பை மாற்றி புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிந்தார். அவருடைய உடலமைப்பு மாற்றத்தால் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

இது எப்படி சாத்தியமானது? ஏன் இந்த மாற்றம்? என்று ஆர்யாவிடம் கேட்டபோது, "ராகவ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் பழங்குடியினர் வேடத்தில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பழங்குடியினர் வேடத்திற்காக 88 கிலோ அளவிற்கு உடலமைப்பை மாற்றினேன். சுமார் 6 மாதங்கள் நாள் முழுக்க உடற்பயிற்சி கூடத்திலேயே இருந்து இந்த அமைப்பை கொண்டு வந்திருக்கிறேன். வேடத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பை மாற்றுவது எனக்கு எப்போதுமே பிடிக்கும்" என்று கூறினார்.

மீண்டும் காதல் நாயகன் வேடம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, "மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடலாம். சைக்கிளிங் மற்றும் சில உடற்பயிற்சிகள் மூலம் பழைய நிலைமைக்கு திரும்பிவிடலாம். அதில் ஒன்றும் பிரச்சினையில்லை" என்றார் ஆர்யா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in