

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் '2.0' படப்பிடிப்பை முழுமையாக இந்த ஆண்டிற்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இயக்குநர் ஷங்கரின் 'எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான '2.0' படத்தில் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய்குமார் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏமி ஜாக்சன் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது டெல்லியில், இந்திய கால்பந்து லீக் தொடரில் சென்னைக்கும் மும்பைக்கும் போட்டி நடப்பது போன்ற காட்சி, டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக பிரம்மாண்டமான அரங்குகள் எல்லாம் அமைத்து சென்னையில் படப்பிடிப்பு தொடங்கினார்கள். இப்படத்தின் படப்பிடிப்புக்காக சுமார் 2 கி.மீ தூரம் ரோடுகள் போடப்பட்டு ஈ.வி.பி-யில் அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள்.
மேலும், டெல்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னையில் தான் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் வெளிநாட்டுக்குச் செல்லவிருக்கிறார்கள்.
முழு படப்பிடிப்பும் 3டி ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தில் நடைபெற்று வருவதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகளைத் தீவிரப்படுத்த இருக்கிறார்கள்.
கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவு பெறுவதைப் பொறுத்து இப்படத்தின் வெளியீட்டு திட்டம் இருக்கும் என்கிறது படக்குழு.