Published : 05 Mar 2022 09:18 PM
Last Updated : 05 Mar 2022 09:18 PM

சிம்புவுடன் இணையும் ஃபகத் ஃபாசில்

‘கரோனா குமார்’ படத்தில் சிம்புவுடன் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிலம்பரசன். விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தைத் தொடர்ந்து ‘பத்து தல’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிலம்பரசன். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் ‘முஃப்தி’ கன்னட படத்தின் ரீமேக்காகும். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘கரோனா குமார்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிலம்பரசன்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தினை கோகுல் இயக்கவுள்ளார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் நாயகனாக சிலம்பரசன் நடிக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சிலம்பரசனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

‘வேலைக்காரன்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஃபகத் ஃபாசில் தற்போது ‘விக்ரம்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘கரோனா குமார்’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கவுள்ளார். இதில் சிலம்பரசன், ஃபகத் ஃபாசில் ஆகியோருடன் நடிக்கும் இதர கதாபாத்திரங்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x