மார்ச் 14-ல் கமலின் 'விக்ரம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

மார்ச் 14-ல் கமலின் 'விக்ரம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு மார்ச் 14-ல் அறிவிக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

காரைக்குடி, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதன் பிறகு ‘பிக் பாஸ் சீசன் 5’, கமலுக்கு கரோனா பாசிட்டிவ் ஆகிய காரணங்களால் தாமதமான இறுதிகட்ட படப்பிடிப்பு, ஒருவழியாக முடிந்துவிட்டது. சில தினங்கள் படப்பிடிப்பு முடிந்ததை வீடியோ வெளியிட்டு அறிவித்தது படக்குழு. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படம் எப்போது வெளிவரும் என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், ‘விக்ரம்’ படத்தை தயாரித்து வரும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் தேதியை, வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி, காலை 7 மணிக்கு அறிவிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும், நடிப்பின் சிகரங்களான கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என மூன்று நட்சத்திரங்களுடன், நட்சத்திர பட்டாளமே இணைந்து கடந்த 9 மாதங்களாக கடுமையாக பணியாற்றியுள்ளதால் பல சாதனைகளை படைக்கும் அனைத்து அம்சங்களும் விக்ரம் படத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in